LATEST NEWS
பலரும் பார்த்திடாத விஜய்-ஜோதிகா நடித்த ‘குஷி’ திரைப்படத்தின் unssen போட்டோஸ்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். 2000ம் ஆண்டின் போது நடிகர் விஜய் பல தோல்விப் படங்களை கொடுத்து ஒரு வெற்றிக்காக காத்திருந்தார். அப்போது வாலி எனும் ஹிட் படத்தை கொடுத்திருந்த எஸ்.ஜே. சூர்யா விஜயை சந்தித்த கூறிய கதைதான் குஷி.
இந்த படத்தில் கதை என எதுவும் இருக்காது. ஒரு இளம்பெண் மற்றும் வாலிபர் இருவருக்கும் இடையேனான ஈகோவை வைத்து மட்டுமே காட்சிகளை நகர்த்தியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா.
அதோடு, படத்தின் கதை இதுதான் என படம் துவங்கும் போதே கூறி அப்படத்தை வெற்றி பெற வைத்தார். இப்படத்தில் விஜய் – ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2001ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
விஜய்யின் திரை வாழ்க்கைக்கு பெரும் திருப்புமுனையாகவும் இப்படம் அமைந்தது. குஷி படம் வெளிவந்து 23 ஆண்டுகள் ஆகியுள்ளது.
ஆனால் தற்பொழுதும் இத்திரைப்படம் ரசிகர்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்று தான். மேலும் இப்படம் உலக அளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து அப்போதைய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
தற்பொழுது குஷி திரைப்படத்தின் பலரும் பார்த்திடாத unssen புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.