அந்த ஒன்னு மட்டும் வேணாம் ஆள விடுங்க.. திரிஷாவுக்கு டாட்டா காட்டி ஓடிய விஜய் சேதுபதி.. பலரும் அறியாத ருசிகர தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த ஒன்னு மட்டும் வேணாம் ஆள விடுங்க.. திரிஷாவுக்கு டாட்டா காட்டி ஓடிய விஜய் சேதுபதி.. பலரும் அறியாத ருசிகர தகவல்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் விஜய் என இவர் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நடிகர்களை திரை உலகில் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் உச்ச நடிகையாக சற்றும் இடைவெளி விடாமல் 24 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதில் இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு நடிகை திரிஷா மீண்டும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட திரைப்படம் தான் 96. ஜெஸ்ஸி கதாபாத்திரம் எந்த அளவிற்கு பிரபலமானதோ அதே அளவிற்கு ஜானு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவும் விஜய் சேதுபதியும் ஏர்போர்ட்டில் பிரியும் முன்பு ஒரு லிப் லாக் சீனை இயக்குனர் பிரேம்குமார் எழுதியுள்ளார். ஆனால் லிப்லாக் என்றால் ஆள விடுங்கடா சாமி நான் வரவில்லை என்று விஜய் சேதுபதி கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்க தொடங்கியுள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் லிப்லாக் சீனுக்கு அவர் சம்மதிக்காத நிலையில் அந்த காட்சி படமாக்கப்படவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in