LATEST NEWS
சிரஞ்சீவி வீட்டு மருமகளாகும் லாவண்யா திரிபாதி.. இனிமே அது மாதிரி நடிக்க மாட்டேன்.. திடீர் முடிவால் அசந்து போன ரசிகர்கள்..!!

தமிழில் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான பிரம்மன் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை லாவண்யா திரிபாதி. தற்போது இவர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் தணல் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். அதே சமயம் தெலுங்கில் அண்டாலா ரக்ஷனி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜாவை இவர் காதலித்து வருவதாக செய்திகள் இணையத்தில் உலா வந்தன.
இவர்கள் இருவரும் இணைந்து அந்தாரிக்ஷம் மற்றும் மிஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் லாவண்யா த்ரி பாதி மற்றும் வருண் தேஜாவுக்கு சமீபத்தில் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவி வீட்டு மருமகள் ஆவதால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களிடம் லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரைகுறை ஆடையில் நடிக்க ஒப்பந்தமான சில படங்களில் இருந்து அவர் வெளியேறிவிட்டார். அதேசமயம் தமிழிலும் ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாக இருந்த நிலையில் அதிலும் மறுப்பு தெரிவித்து விட்டார். காரணம் இதில் அவரது கதாபாத்திரத்தை கவர்ச்சியும் படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதுமாக இருந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சிரஞ்சீவி வீட்டு மருமகளாக உள்ள நிலையில் இது போன்ற கவர்ச்சி வேடங்களில் நடிப்பது சரியல்ல என்று அவர் பட குழுவினருக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.