LATEST NEWS
தன்னைவிட 16 வயது குறைவான நடிகையை ரகசிய திருமணம் முடித்த கேப்டன் அமெரிக்கா நடிகர்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்..!!

மார்வெல் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ் இவான்ஸ் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் மூலமாக உலக அளவில் மிகவும் பிரபலமானவர். 42 வயதாகும் இவர் 26 வயதான போர்ச்சுகிசிய நடிகை ஆல்பா பாப்டிஸ்டாவை காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் இங்கிலாந்து பாஸ்டன் நகரில் உள்ள கிறிஸ் இவான்ஸ் வீட்டில் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்தில் சில முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதே சமயம் இவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் திருமண தகவல் வெளியிட மாட்டோம் என்ற உறுதிமொழி பத்திரத்திலும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. அவர்களது செல்போன்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் திருமணத்திற்கு முந்தைய விருந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதன் மூலம் இவர்கள் ரகசிய திருமணம் தெரிய வந்துள்ள நிலையில் புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் தன்னைவிட 16 வயது குறைவான பெண்ணை கிறிஸ் இவான்ஸ் ரகசிய திருமணம் செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.