LATEST NEWS
“எனக்கு 16 வயசுல என் அப்பா இப்படி சொன்னாரு”… உருக்கமான சம்பவத்தை பகிர்ந்த விஜய் டிவி டிடி… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினி, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் டிடியும் அவரின் அக்கா பிரியதர்ஷினியும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் தனது அப்பா குறித்து சில உருக்கமான விஷயங்களை டிடி பகிர்ந்து கொண்டார். அதாவது ஒரு நாள் நான் பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது எனக்கு 16 வயது தான் இருக்கும். என் அம்மா வேண்டாம் என்று கூறிய நிலையில் என்னுடைய அப்பா நீ போயிட்டு வா நான் பாத்துக்குறேன் என்று கூறினார்.
அப்போது ஒரு அரைகுறை ஆடையை அணிந்திருந்த நிலையில் என் அம்மா மறுப்பு தெரிவிக்க என்னுடைய அப்பா உடனே நீ வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒரு சட்டையை மேலே போட்டுக் கொண்டு போய்விட்டு அங்கே சென்று கழட்டி விடு. திரும்ப வரும்போது அதே சட்டையை போட்டுக் கொண்டு வீட்டிற்கு வா என்று கூறினார். மேலும் கிளப்புக்கு சென்று 11 மணியளவில் நான் போன் பண்ணும் போது நீ எடுக்க வேண்டும் என்று கூறி ஒரு செல்போனையும் கொடுத்து அனுப்பினார்.
நானும் கிளப்புக்கு சென்று இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் எனக்கு உடனே அடுத்து போய் என்னுடைய தந்தைக்கு போன் அடித்து எனக்கு பிடிக்கவில்லை நான் வந்து விடுகிறேன் என்று கூறியதும் உடனே என் தந்தை பிடிக்கலனா வந்துடுடா என்று கூறினார். நானும் என்னுடைய அக்காவும் எதுவரை குடித்தது கிடையாது. எங்களை சுற்றி 100 பேர் இருந்தாலும் எங்களுக்கு குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எங்களின் தந்தையும் எங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்திருந்தார் அதன் காரணமாகவே அந்த காலகட்டத்திலும் எங்களை எங்கு வேண்டுமானாலும் அனுப்பினார் என்று உருக்கமான தகவல்களை டிடி பகிர்ந்து கொண்டார்.