LATEST NEWS
நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளை வேற லெவலில் கவுரவித்த கூகுள்… என்ன தெரியுமா..??

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஸ்ரீதேவி கதாநாயகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இன்றும் இவரின் எந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் மக்கள் மத்தியில் பழைய நினைவுகள் ஏற்படும்.
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி கடந்த 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பிறந்த நிலையில் சிறுவயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தன்னுடைய நான்கு வயதில் கந்தன் கருணை திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கதாநாயகியாக அறிமுகமான இவர் திரையுலகில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1976 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு திரைப்படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது பெற்றார்.
அதனைப் போலவே 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இவர் நடித்த மாம் என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி பல புகழுக்குரிய ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் உயிரிழந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் எனப்படும் சிறப்பு சித்திரத்தை வெளியிட்டு அவரை கௌரவ படுத்தியுள்ளது.