ஏலத்திற்கு வரப்போகிறது ஸ்ரீதேவியின் புடவைகள்….. யார் ஏலம் விடுறாங்க தெரியுமா?…. அதுல என்ன செய்யப் போறாங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏலத்திற்கு வரப்போகிறது ஸ்ரீதேவியின் புடவைகள்….. யார் ஏலம் விடுறாங்க தெரியுமா?…. அதுல என்ன செய்யப் போறாங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி என்ற பெயரை சொன்னால் யாருக்கும் அறிமுகம் தேவையில்லை. அப்படி மிகவும் பிரபலமான நடிகை. கே பாலச்சந்திரன் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உடன் மட்டுமே ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களும் நடித்து பிரபலமான இவர் தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரளா அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும், 300 வது படம் தான்.

Advertisement

கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக 2013 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் மறைந்துவிட்டாலும் இன்னமும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு டாட்டா பாய் பாய் சொன்னார். அதன் பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த படத்தில் இவர் பயன்படுத்திய சேலைகள் தற்போது ஏலத்திற்கு விடப்படும் என்று அப்படத்தில் இயக்குனர் கௌரி சிந்து கூறியிருந்தார் . அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழை சிறுமிகளின் படிப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in