காபியுடன் ஒரு மணி நேரம்….! நட்பினை எண்ணி நெகிழ்ச்சி….. பெருமையுடன் சரத்குமார்…. வைரல் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காபியுடன் ஒரு மணி நேரம்….! நட்பினை எண்ணி நெகிழ்ச்சி….. பெருமையுடன் சரத்குமார்…. வைரல் புகைப்படம்….!!!!

Published

on

கல்கி எழுதி இருந்த பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை உலக அளவில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.

கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் சரத்குமாரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறும் விதமாக நடிகர் சரத்குமார் நடிகர் ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

Advertisement

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து சரத்குமார் தனது twitter பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது: “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பெரிய பழுவேட்டரையர்” கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in