“பெண்களுக்கு குட் நியூஸ்.. இனி மாதம் ரூ.2500.. எப்போது தொடக்கம் தெரியுமா?.. அரசு அசத்தல் அறிவிப்பு”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பெண்களுக்கு குட் நியூஸ்.. இனி மாதம் ரூ.2500.. எப்போது தொடக்கம் தெரியுமா?.. அரசு அசத்தல் அறிவிப்பு”..!!

Published

on

டெல்லியில் பா.ஜ.க. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்தது. இந்த அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அரசு, ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முடிவு செய்துள்ளது.

பெண்களுக்கான இந்த நிதியுதவித் திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டை விட டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் வழங்கப்படும் உதவித்தொகை இரண்டு மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in