“நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்?”.. எதிர்க்கட்சிகளை நக்கல் செய்த முதலமைச்சர் விஜய்.. அலறும் அரசியல் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்?”.. எதிர்க்கட்சிகளை நக்கல் செய்த முதலமைச்சர் விஜய்.. அலறும் அரசியல் வட்டாரம்..!!

Published

on

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சட்டசபையில் ஸ்டாலின் தன் மீது அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியதோடு, தனக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே தான் அரசியலுக்கு வந்துள்ளதாக உருக்கமாகத் தெரிவித்தார். தனக்குக் காயமும் வலியும் கொடுத்தவர்களுக்குத் தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், காலத்திற்கும் திமுக எழ முடியாத அளவிற்கு மக்கள் நிரந்தரமாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், வரும் இடைத்தேர்தலில் தீயசக்தியான திமுகவை மக்கள் வைத்து வெளுத்து வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், மக்கள் தங்கள் பக்கம் இருக்கும் போது தங்களுக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம் என்று வினவிய அவர், தாங்கள் ஒன்றும் ‘வாஷிங் மெஷின்’ அல்ல என்றும், ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரத்தை தவெக உடைத்தெறிந்துள்ளதாகவும் அதிரடியாக முழங்கினார்.

அரசியலை ஒரு வியாபாரமாக மாற்றியுள்ள திமுக தான் உண்மையான ‘வெண்டிங் மெஷின்’ என்று கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் விஜய், தீயசக்தி இப்போது யார் கதவைத் தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே வெளிப்படையாகத் தெரியும் என்றும் சாடினார். தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆன பிறகும், தான் கரூர் செல்லக்கூடாது எனச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது எனத் தைரியமாகக் கூறுங்கள், நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என்றும் மக்களுக்கு உறுதியளித்தார். இறுதியாக, மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை திட்டத்தை தமிழகம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது என்றும் முதலமைச்சர் விஜய் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in