LATEST NEWS
“நாடகம் ஆடிட்டாங்க” கரூர் சம்பவத்திற்கு பின்னால் காவல்துறையின் சதி… பகீர் கிளப்பிய முதல்வர் விஜய்..!!!
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன்முறையாக அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், கடந்த செப்டம்பர் மாதத்தில் கரூரில் நிகழ்ந்த அந்தத் துயரமான சம்பவம் தனது மனதில் இன்னும் ஆறாத, தீராத வடுவாக மாறிவிட்டதாக மிகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் காவல்துறையின் சதி இருப்பதாக விஜய் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காவல்துறை நினைத்திருந்தால், அங்கு அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படப்போவதை முன்கூட்டியே அறிந்து, அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்து தடுத்திருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவல்துறையே திட்டமிட்டு நாடகமாடி, அங்கிருந்த அக்கா, தங்கை மற்றும் குழந்தைகளை நாம் இழப்பதற்குக் காரணமாகிவிட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
