LATEST NEWS
அன்னைக்கு “பார்ட்டி ஃபண்ட்” ன்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன்.. எடுத்தாங்க பாரு ஓட்டம்.. குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கோ.. திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்..!!
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். மக்கள் அமைத்த தங்களது அரசு மீது எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு ‘டிசைன் டிசைனாகக்’ குறை கூறி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், “தீய சக்தியும் தீர்ந்த சக்தியும் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் எல்லாத் துறைகளிலும் கொள்ளையடித்துள்ளனர்” என்று மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வை நினைவு கூர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “பேரவையில் நான் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனக் குறிப்பிட்டதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்! குற்றம் உள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். விஜய்யின் இந்த அதிரடியான பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
