LATEST NEWS
இத்தனை வலி, காயம் பட்டுட்டேன்… உங்களை விட்டுட்டு நான் ஓடுவேனா..? மேடையில் எமோஷனல் ஆன விஜய்..!!!
கரூரில் பேசிய விஜய், தனக்கு எவ்வளவு தொல்லைகள் மற்றும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், தான் மக்களை விட்டு எப்போதும் ஓட மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும், “பணமா… ஜனமா…” என்று ஒரு கேள்வி எழுந்தால், தனக்குத் எப்போதும் தன்னுடைய ‘ஜனம்’ தான் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார். தான் ஓடி ஒளிந்துவிட்டதாக சிலர் பழிபோடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய தமிழக வெற்றிக் கழக அரசின் மீது பல்வேறு தரப்பினர் விதவிதமாகக் குறை கூறி வருவதாக அவர் சாடியுள்ளார். தங்களுக்கு இத்தனை வலிகளையும், காயங்களையும் கொடுத்துவிட்டு, மீண்டும் தங்கள் மீதே குறை சொல்வது நியாயமா என்ற ரீதியில் அவர் அங்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
