LATEST NEWS
விஜய் டிவி நாஞ்சில் விஜயனுக்கு டும்டும்… எளிமையாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்… மணப்பெண் யார் தெரியுமா..??
விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் டிவியில் அது இது எது, கலக்கப்போவது யாரு மற்றும் சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தனது காமெடியால் மக்களை வெகுவாக கவர்ந்தவர்.
அதே சமயம் இவர் ராமருடன் பெண் வேடமிட்டு காமெடியில் அசத்துவதை ரசிக்காத ரசிகர்களை கிடையாது. குறிப்பாக இவரும் ராமரும் சேர்ந்து சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை என்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.
இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நாஞ்சில் விஜய் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
