நடிகை சமந்தா செய்த செயல்…. மனம் நெகிழ்ந்து வீட்டில் கோவில் கட்டிய ரசிகர்…. வெளியான புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சமந்தா செய்த செயல்…. மனம் நெகிழ்ந்து வீட்டில் கோவில் கட்டிய ரசிகர்…. வெளியான புகைப்படம்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார்.

Advertisement

இவரின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை.இந்நிலையில் சமந்தாவிற்கு சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் ஆந்திராவில் கோவில் கட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர், சமந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலமாக பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது எனக்கு மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோவில் கட்ட தீர்மானித்து எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோவில் கட்டி வருகிறேன். தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாளை திறப்பு விழா நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in