CINEMA
விஜய் அந்த ஸ்டைலில் கேட்டதால் தான்…. “மட்ட” பாடலை உருவாக்கினேன் – யுவன் ஷங்கர் ராஜா…!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். இந்த படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இதில் வரும் மட்ட பாடல் நல்ல பிரபலமாகி விட்டது. இந்நிலையில் இந்த மட்ட பாடலை விஜய்க்காக உருவாக்கியதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், ‘G.O.A.T’ படத்தின் கிளைமேக்ஸுக்காக வேறு இரண்டு பாடலை உருவாக்கி வைத்திருந்தேன்.
ஆனால், யுவன் ஸ்டைலில் ஒரு பாடல் வேண்டுமென விஜய் கேட்டுக் கொண்ட பிறகே “மட்ட…” பாடலை இசையமைத்தேன் என்று அவர் தெரிவித்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.