இர்பான்கானை தொடர்ந்து மற்றுமொரு பிரபல நடிகர் மரணம்..! – அதிர்ச்சியில் உறைந்த போன திரையுலகினர்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இர்பான்கானை தொடர்ந்து மற்றுமொரு பிரபல நடிகர் மரணம்..! – அதிர்ச்சியில் உறைந்த போன திரையுலகினர்..!

Published

on

இப்போ தான் பிரபல நடிகரான இர்பான் கான் உடல்நல குறைவால் மரணித்தார். அந்த சோகம் இன்னும் மாறாத நிலையில். பாலிவுட் திரையுலகில் மற்றுமொரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர்(68) வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அவரது சகோதரரும் நடிகருமான ரந்தீர் கபூர் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில், அவர் தீவிர பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 68. அவருக்கு நீத்து கபூர் என்கிற மனைவியும், ரிதிமா என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்கிற மகனும் உள்ளனர். ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 2018ம் ஆண்டில் இருந்து புற்றுநோயுடன் போராடி வந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நேற்று உயிர் இழந்தார்.

Advertisement

அந்த அதிர்ச்சியில் இருந்து பாலிவுட்காரர்கள் மீண்டு வருவதற்குள் ரிஷி கபூர் மரணம் அடைந்துள்ளார். இரண்டு நாட்களில் இரண்டு பிரபலங்களை பரிகொடுத்துவிட்டு பாலிவுட்காரர்கள் கவலையில் இருக்கிறார்கள். ரிஷி கபூரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்களும், பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in