ஏழை மீனவரை கோடீஸ்வரன் ஆக்கிய திமிங்கலம்..! மோசமான வானிலையால் அடித்த 50 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் – cinefeeds
Connect with us

Uncategorized

ஏழை மீனவரை கோடீஸ்வரன் ஆக்கிய திமிங்கலம்..! மோசமான வானிலையால் அடித்த 50 கோடி ரூபாய் அதிர்ஷ்டம்

Published

on

தாய்லாந்தில் ஏழை மீனவரை அடையாளம் தெரியாத திமிங்கலம் கோடீஸ்வரன் ஆக்கியுள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார். தாய்லாந்தின் Songkhla மாகாணத்தை சேர்ந்தவர் Chalermchai Mahapan. 20 வயதான இவர் மீனவராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 6-ஆம் திகதி வானிலை மோசம் காரணமாக உடனடியாக தனது படகில் இருந்து கரைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அவர் கரைக்கு வந்து படகை தள்ளிய போது, அங்கிருக்கும் கடற்கரை மணலில் ஏதோ வெள்ளைக் கல் போன்று இவர் கண்ணில் பட்டுள்ளது. இதை முதலில் சாதரண பாறையாக இருக்கும் என்று நினைத்த நிலையில், அதன் பின் அதை உற்று பார்த்த போது, அது திமிங்கலத்தின் வாந்தியாக இருக்கலாம், அதிர்ஷ்ட பொருளாக இருக்கலாம் என்று நினைத்து அருகில் சென்று பார்த்துள்ளார்.

Advertisement

அதன் பின் சந்தேகத்துடனே, அதை உடனே வீட்டிற்கு எடுத்துச் சென்று அங்கிருக்கும் கிராமவாசிகளிடம் கேட்ட போது, அவர்கள் அதை அவர் நினைத்தது போன்றே கூறியுள்ளனர். அதாவது, அதை திமிங்கலத்தின் வாந்தி என்று கூறுவர். அதாவது நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும். வெளியே செல்லாது, இதானால் அது ஒரு பெரிய பந்து போல் உருவாகும். இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும்.

மெழுகு பந்துப் போல் இருக்கும். இந்த பொருளை விஞ்ஞானிகள் Ambergris என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும். இதை கடலில் காணலாம், அல்லது கடல் அலைகளால் இழுத்துவரப்பட்டு கடற்கரைகளில் காணலாம். இது திமிங்கலங்களில் அடி வயிற்றில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்த Ambergris(திமிங்கலத்தின் வாந்தி) வாசனை தொழிலில் தேடப்படும் பொருளாக உள்ளது. இது Ambergris தானா என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, அதை தீயில் வைத்து உருக்கினால், வாசம் வரும், அதை வைத்து இதை கண்டுபிடித்துவிடலாம். அதன் படி Chalermchai Mahapan செய்யவே, இது Ambergris என்பது உறுதி செய்யப்பட்டது. இதை கண்டுபிடித்த அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக நினைப்பதாக கூறியுள்ளார். மேலும், அவர் இப்போதைக்கு நான் இதை விற்கப்போவதில்லை, அவசரப்படபோவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், குறித்த மீனவர் இதை கிலோவுக்கு உள்ளூர் மதிப்பிற்கு 1,00,000 தாய் பாட்டிற்கு விற்க முடிவு செய்துள்ளார். அப்படி பார்த்தா, இவருக்கு 7 கிலோ எடை கொண்ட Ambergris கிடைத்திருப்பதாகவும், இது பிரித்தானியா மதிப்பில் கிலோவிற்கு 24,500 பவுண்ட் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Lancashire கண்டுபிடிக்கப்பட்ட 1.57 கிலோ Ambergris 50,000 பவுண்ட்டிற்கு விற்கப்பட்டது.

Advertisement

அதே ஆண்டு நவம்பரில் 80 கிலோ Ambergris 3 மில்லியன் டொலருக்கு விற்றதால், தற்போது இவர் 210,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 5,53,98,025 கோடி ரூபாய்)-க்கு விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in