LATEST NEWS
சமுத்திரகனி படத்தில் நடித்துள்ள கன்னிகா.. அதை கட் பண்ணிடாங்க..! அப்படி என்ன காட்சின்னு தெரியுமா..?
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸில் கலந்து கொண்ட சினேகன் மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார். அந்த சீசனில் சினேகன் இரண்டாவது இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்த இவர் ஆரம்ப காலத்தில் வைரமுத்துவிடம் முதலில் பணிபுரிந்தார். அதன் பிறகு தனியாக வந்து பாடல்கள் எழுதத் துவங்கினார்.
இவர் தற்போது வரை 2500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியவர் அமீர். மேலும் இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பனங்காட்டு நரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்தப் படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் நடிகர் சினேகன் பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் நடிகை ஒருவரை கவிஞர் சினேகன் ஜூலை 29ஆம் தேதியன்று திருமணம் செய்துள்ளார். தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது இவர் கவிஞர் சினேகன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது . சினேகன் திருமணம் செய்துள்ள கன்னிகா அவர்கள் சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில்லும் நடித்துள்ளாராம்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்தது நான்தான். மேலும் அந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு காதல் மெசேஜ்களை நான் தான் அனுப்பி இருப்பேன். அதன் பின்னர் லைப்ரரியில் உட்கார்ந்து இதைப்பற்றி கேள்வி கேட்பார். அப்போதுதான் உணர்ச்சிவசமான வசனங்கள் பேசி இருந்தேன். ஆனால் அந்த காட்சியை நீக்கி விட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
