செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேரர் உங்க வீட்டை ஆட்சி செய்ய வேண்டுமா..? இந்த 10 விஷயத்த மட்டும் செய்யுங்க…! – cinefeeds
Connect with us

Uncategorized

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேரர் உங்க வீட்டை ஆட்சி செய்ய வேண்டுமா..? இந்த 10 விஷயத்த மட்டும் செய்யுங்க…!

Published

on

என்னதான் கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது.

சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது.

Advertisement

கை நிறைய சம்பாதித்து பணத்தினை ஒருபக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த பத்து விஷயங்களைத்தான்…

Advertisement

வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

Advertisement

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

Advertisement

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

Advertisement

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.

பசுவின் கோமியத்தை தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் . 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

Advertisement

பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in