தன் 62 வது பிறந்தநாளை வேற லெவெலில் கொண்டாடிய நடிகர் வடிவேலு…யாருடன் கொண்டாடினார் தெரியுமா..? வைரல் புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன் 62 வது பிறந்தநாளை வேற லெவெலில் கொண்டாடிய நடிகர் வடிவேலு…யாருடன் கொண்டாடினார் தெரியுமா..? வைரல் புகைப்படம்…

Published

on

நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முன்னிலையில் உள்ளவர்தான் வைகைப்புயல் வடிவேலு. தன் நடிப்பின் மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் 2 ம் புலிகேசி, எலி போன்ற படங்களில் ஹீரோ வாகவும் நடித்து கலக்கினார். தொடர்ந்து பல படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . ஒரு சில காரணத்திற்க்காக சில காலம் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Advertisement

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகனாகவும் மற்றும் மாமன்னன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது 62 வது பிறந்த நாளை மாமன்னன் படத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின் , கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மாறி செல்வராஜ் போன்ற பல பிரபலங்களும் சேர்ந்து கேக் வெட்டி மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்.

தற்போது அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in