துளிகூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்…எப்படி இருக்காங்கன்னு பாருங்க… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் – cinefeeds
Connect with us

Uncategorized

துளிகூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்…எப்படி இருக்காங்கன்னு பாருங்க… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

Published

on

தமிழ்த்திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் புகழின் உச்சத்துக்கு போன நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். கீர்த்திக்கு ஒரு அக்காவும் உண்டு. இவர் குடும்பத்தோடு கேரளத் தலைநகர், திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

Advertisement

அண்மையில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரியின் பயோகிராபி பிலிம் தமிழில் நடிகையர் திலகம் எனவும், தெலுங்கில் மகாநடி எனவும் ரிலீசானது. இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசியவிருதும் கிடைத்தது.

தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், விசால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இதற்காக தன் உடம்பையும் வெகுவாகக் குறைத்திருக்கிறார் கீர்த்தி.

Advertisement

அந்தபடங்கள் இணையத்தில் வெளியான போதே செம வைரலானது. அண்மையில் பென் குயின் என்னும் தமிழ்ப்படத்தில் கீர்த்தி நடித்து முடித்தார். அது ஓடிடி தளத்தில் வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தான் துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

கோயிலுக்குப் போன இவர் கோயில் கோபுர முகப்பு தெரியும்படி துளி கூட மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அதை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இணையத்தில் அது செம வைரல் ஆகிவருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in