LATEST NEWS
நடிகர் சந்தனமுடன் இணைத்து நடிப்பில் தாத்தா அப்பாவை போல் கலக்கும் பேரன்கள்…வெளியான குடும்ப புகைப்படம்!
நாகேஷ் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர், பாலிவுட்டில் முக்கியமாக தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவருடைய நகைச்சுவைக்கும், குணச்சித்திர நடிப்புக்கும் ஈடு இணை யாருமில்லை. இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவருடைய மகன் தான் பிரபலமான நடிகர் ஆனந்த் பாபு. இவர் 1983-ம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகம் ஆனார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஆனந்த்பாபுவின் குடும்ப புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகர் ஆனந்த் பாபுவுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன. அதில் மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. ஆனந்த்பாபுவின் இரண்டு மகன்களின் பெயர்கள் பிஜேஷ், கஜேஷ்.
தற்போது இவர்கள் இருவரும் நடிகர்களாக உள்ளனர். பிஜேஷ் அவர்கள் தற்போது சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த சர்வர் சுந்தரம் படம் தன்னுடைய தாத்தா நடித்த சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது. கஜேஷ் கல்கண்டு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் 2014 இல் வெளிவந்தது. தன் தாத்தா, தந்தையைப் போலவே ஆனந்த்பாபுவின் மகன்களும் சினிமா துறையில் களம் இறங்கியுள்ளனர்.
