நடிகர் ஜீவன் என்னவானார்..? என்னது, இவர் பிறப்பிலேயே கோடீஸ்வரராமே.. இணையத்தில் வெளியான தகவல் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகர் ஜீவன் என்னவானார்..? என்னது, இவர் பிறப்பிலேயே கோடீஸ்வரராமே.. இணையத்தில் வெளியான தகவல் இதோ..

Published

on

தமிழ் சினிமாவில் நான் அவனில்லை, திருட்டுப்பயலே போன்ற படங்களின் மூலம் ஹீரோவாக அறியப்பட்ட நடிகர் ஜீவன் “காக்க காக்க” போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும், தற்போது நடிகர் ஜீவன் நடிப்பில் அடுத்ததாக “பாம்பாட்டம்” என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், நடிகர் ஜீவன் நடித்த சில படங்கள் அப்படியே பெட்டிக்குள் முடங்கி விட்டது. சில படங்கள் பாதியில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நடிகர் ஜீவன் படங்கள் தோல்வியடைந்தாலும்,

அதை பற்றி கவலைப்படாத நடிகர் என்று கூறுகின்றனர். அதற்கு காரணம் நடிகர் ஜீவன் பிறப்பிலேயே ஒரு பயங்கரப் கோடீஸ்வரராம். திண்டுக்கல்லில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறாராம் நடிகர் ஜீவன். அவரது தந்தை நடத்தி வந்த தொழிலை தற்போது நடிகர் ஜீவன் கவனித்து வருகிறாராம். இடையிடையில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் எனவும் கூறுகின்றனர்.

Advertisement

சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் தான் சினிமாவில் சில படங்களில் நடித்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வெற்றி நடை போட்டார் எனவும், சினிமாவில் உள்ள சில ஆட்களால் அவருடைய படங்கள் முடங்கி மார்க்கெட் இல்லாமல் போனது எனவும் கூறுகின்றனர்.

மேலும், நடிகர் ஜீவன் என்னதான் பெரிய பணக்காரராக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் எளிமையாக பழகி நிறைய நட்புகளை சம்பாதித்து வைத்துள்ளார், என்பதாக கூறப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in