வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு மீண்டும் தமிழகத்தில் தேர்வு எழுதிய நடிகை சாய்பல்லவி..! – காரணம் இது தான்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு மீண்டும் தமிழகத்தில் தேர்வு எழுதிய நடிகை சாய்பல்லவி..! – காரணம் இது தான்..!

Published

on

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான எஃப்.எம்.ஜி.ஈ. தேர்வை பிரபல நடிகை சாய் பல்லவி எழுதியுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.

Advertisement

ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் இத்தேர்வைக் க ட்டா யம் எழுத வேண்டும்.

அதே சமயம் அமெரிக்கா, கனடா, australia, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை.

Advertisement

கொ ரோ னா அ ச்சு றுத் தல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது.

2016-ல் ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் பயின்ற பிரபல நடிகை சாய் பல்லவி, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற FMGE  தேர்வில் பங்கேற்றார்.

Advertisement

அப்போது, சக தேர்வர்கள், சாய் பல்லவியை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in