41 வயதிலும் அழகு குறையாமல் அப்படியே இருக்கும் நடிகை லைலா.. எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

41 வயதிலும் அழகு குறையாமல் அப்படியே இருக்கும் நடிகை லைலா.. எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..

Published

on

தமிழ் சினிமாவில் “கள்ளழகர்” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை லைலா ஆவார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகிய நடிகர்களுக்கு லைலா ஜோடியாக நடித்துள்ளார். அள்ளித்தந்த வானம், உன்னை நினைத்து, கம்பீரம், கள்ளழகர், தோசத்தின் ஆனந்தா, பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் முதல்வன் போன்ற படங்களிலும் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

மேலும், இவர் நடிகர் சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்த “தில்” படத்தில் இவர் செய்யும் குல்ஃபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இவர் 2004 ஆம் ஆண்டு “பிதாமகன்” படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கினார். லைலா, மெஹ்தி என்பவரை எட்டு வருடம் காதலித்து நிச்சயதார்த்தம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து 2006 இல் இவர்களுக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு இப்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில், தற்போது லைலா நீண்ட இடைவெளிக்குப்பின் “அலிசா” என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கூட “லைலா” இன்னும் மாறவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in