அடப்பாவமே..! ஒரே குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து மரணம்.. 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷக் கெமிக்கல்..! திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே..! ஒரே குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து மரணம்.. 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷக் கெமிக்கல்..! திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகலா பதம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் குடும்ப சொத்து தகராறு தொடர்பான கோணமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல்களின்படி, உயிரிழந்த மகேஷின் தாய் சந்திராவதி, கடந்த 2025 ஆகஸ்ட் 18 அன்று சுமார் 200 சதுர அடி விஸ்தீரணமுள்ள வீட்டை தனது மூத்த மகள் சுனிதா பெயருக்கு எழுதி வைத்துள்ளார். பின்னர், வீட்டின் பெயர் மாற்றம் குறித்த விவரம் அறிந்த மகேஷ், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதற்கு முன்பும் அவர் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறியிருந்த நிலையில், அப்போது குடும்பத்தினரும் உறவினர்களும் சேர்ந்து அந்தப் பிரச்சினையை சமாதானப்படுத்தியிருந்தனர்.

இதற்கிடையில், கடந்த ஜூலை 11 அன்று மகேஷின் மகன் சாக்ஷா பெயரில் உள்ள ‘சாக்ஷா ஃபார்ம்’ நிறுவனத்திற்காக காசியாபாத்தில் இருந்து சோடியம் நைட்ரைட் இரண்டு பாக்கெட்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தலா 500 கிராம் எடைக் கொண்ட இந்த பாக்கெட்டுகளின் டெலிவரிக்காக மொத்தம் 1296 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 17 அன்று குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இறந்து கிடந்த நிலையில், இந்த ரசாயனப் பொருள் வாங்கியது குறித்து தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. ஆன்லைன் மூலமாக இந்த ஆர்டரை யார் செய்தார்கள், அந்தப் பாக்கெட்டுகள் உண்மையில் யாரிடம் சென்றடைந்தன என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

Advertisement

சோடியம் நைட்ரைட் என்பது சில தொழிற்துறை செயல்முறைகளிலும் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனமாகும். இருப்பினும், இதனை அதிக அளவில் உட்கொண்டால் கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறனைப் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக உடற்கூறாய்வு அறிக்கை, உள்ளுறுப்புகள் மற்றும் பிற தடயவியல் சோதனை அறிக்கைகளுக்காக காவல்துறை காத்திருக்கிறது. ரசாயனம் வாங்கியதற்கான ஆவணங்கள் மற்றும் குடும்பத்தில் வேறு என்னென்ன தகராறுகள் இருந்தன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதோடு, போலீசார் இவ்வழக்கில் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in