LATEST NEWS
நீட் தேர்வில் 79,396-வது ரேங்க்… ரூ.2 கோடியில் சீட்… முதுநிலை மருத்துவப் படிப்பில் அரங்கேறிய அதிர்ச்சி அம்பலம்..!!
நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்று 79,396-வது ரேங்க் எடுத்த பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், சுமார் 2 கோடி ரூபாய் வரை பணம் செலுத்தி முதுநிலை மருத்துவம் படிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெருந்தொகை கொடுத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட EWS பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சீட் வாங்கியுள்ள இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்த EWS பிரிவின் கீழ் ‘ஏழைகள்’ என வகைப்படுத்தப்படுகின்றனர். அவ்வாறு இருக்கையில், பல கோடி ரூபாய் பணம் கட்டி இவர்கள் எவ்வாறு சீட் பெற முடிகிறது என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இந்த நடைமுறை தகுதியான மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை வணிகமயமாக்குவதாகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
