இந்த வயசுல இதெல்லாம் தேவையா?… மன்சூர் அலிகான் வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!! – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த வயசுல இதெல்லாம் தேவையா?… மன்சூர் அலிகான் வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் திரிஷா, அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதனிடையே சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடல் நா ரெடி தான் வரவா வெளியிடப்பட்டது. இந்தப் பாடலுக்கு நட்சத்திரங்கள் பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் மன்சூர் அலிகான் இந்த பாடலுக்கு காரில் பயணித்தபடி வீடியோ வெளியிட்டார்.

Advertisement

ஆனால் தற்போது இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது காரில் பயணித்து செல்லும் அவர் சீட் பெல்ட் அணியாமல் இந்த பாடலுக்கு vibe செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். 61 வயது நிரம்பிய ஒரு மூத்த நடிகருக்கு சீட்பெல்ட் அணியாமல் இப்படி ஒரு நடனம் தேவையா என நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in