LATEST NEWS
“என் கனவை நினைவாக்கிய படம்”… ஹீரோவாக களமிறங்கும் CKW புகழ் போட்ட உருக்கமான பதிவு..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் புகழ். இவர் முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியின் சிரிப்புடா,சிரிச்சா போச்சு மற்றும் கலக்கல் சாம்பியன் சொல்லிட்டு பல நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்திய இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அதன்படி என்ன சொல்லப் போகிறாய், டான், நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் வலிமை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் புகழ் ஹீரோவாக நடித்துள்ளார். அதாவது மிஸ்டர் ஜுகீப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் முதல்முறையாக புகழ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷ்ரின் காஞ்சவாலா நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை சுரேஷியர்க்கும் நிலையில் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியான நிலையில் தற்போது அதனை பகிர்ந்து புகழ் உருக்கமான பதிவை பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
