LATEST NEWS
உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி… தென் ஆப்பிரிக்கா சென்ற நடிகை ரித்திகா சிங்.. வெளியான புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான். இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார்.
அந்தத் திரைப்படங்கள் அவ்வளவு அதிக வெற்றியை பெறாத காரணத்தால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்நிலையில் ரித்திகா சிங் கராத்தே உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
