உலக கராத்தே சாம்பியன்ஷிப்பில் நடிகை ரித்திகா சிங்… இணையத்தை கலக்கும் வீடியோ.. வாழ்த்தும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

உலக கராத்தே சாம்பியன்ஷிப்பில் நடிகை ரித்திகா சிங்… இணையத்தை கலக்கும் வீடியோ.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான்.

இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ரித்திகா சிங் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் பாலிவுட் திரைப்படங்களிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்காக தற்போது ரித்திகா சிங் சென்றுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ritika Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ritika_offl)

Advertisement

Advertisement