“சொல்வதெல்லாம் உண்மை”…. என் வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் … முதல் முறையாக மனம்திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சொல்வதெல்லாம் உண்மை”…. என் வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் … முதல் முறையாக மனம்திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

Published

on

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது. அது மட்டுமல்லாமல் லஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. அதாவது இவர் மேல் தட்டு வருக அரசியலை தூக்கி பிடிக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இவர் தற்போது தான் இயக்கம் புது படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்துள்ளார். இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் ஐந்தாவது படமாக ஆர் யூ ஓகே பேபி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, ரோபோ சங்கர் மற்றும் மிஸ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் , சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த, மோசமான ஒரு நிகழ்வாக அமைந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் அறிய விரும்பினேன். அந்த குருட்டு நம்பிக்கை தான்  நிகழ்ச்சியை நடத்த தேவைப்பட்டது. என்னுடைய நோக்கங்கள் எப்போதும் சரியாகவே இருந்தது. மிக முக்கியமான நிலைகளில் நான் உறுதியாகவே இருந்தேன். அதில் ஒரு முக்கியமான கண்ணோட்டத்தை எனது ஆர் யூ ஓகே பேபி படம் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Lakshmy Ramakrishnan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@lakshmyramakrishnan)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in