நயன்தாராவுக்கு அது நல்லாவே தெரியும்… நீங்க ஜாக்கிரதையா இருங்க… விக்கிக்கு நடிகர் ஷாருக்கான் அட்வைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நயன்தாராவுக்கு அது நல்லாவே தெரியும்… நீங்க ஜாக்கிரதையா இருங்க… விக்கிக்கு நடிகர் ஷாருக்கான் அட்வைஸ்..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட நிலையில் அதற்காக திரைப்படத்தை பாராட்டி நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஷாருக்கான் நயன்தாராவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

Advertisement

அதாவது நயன்தாரா அருமையானவர், ஆனால் இதனை நான் யாரிடம் சொல்கிறேன், உங்களுக்கு முன்பே எனக்கு தெரியும், ஆனால் அவர் இப்போது நன்றாக அடிக்கவும் உதைக்கவும் கற்றுக் கொண்டுள்ளார்,நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கிண்டலாக பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in