LATEST NEWS
“இதென்ன கூத்தா இருக்கு..?! சொந்த காசுல பூங்காவை சுத்தம் செய்த மக்கள்…” அடுத்த நாளே ‘கிரெடிட்’ அடித்த பாஜக எம்.எல்.ஏ..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மள்ளேசுவரம் பகுதியில் பொதுமக்கள் தங்களது சொந்தப் பணத்தைத் திரட்டி அநே பூங்காவை தூய்மைப்படுத்திய நிலையில், அடுத்த நாளே அங்கு வந்து பாஜக எம்.எல்.ஏ அஸ்வத் நாராயணன் அந்தப் பணிகளைத் தாமே செய்ததாகப் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மள்ளேசுவரத்தில் உள்ள அநே பூங்கா மிகவும் பாழடைந்த நிலையில் இருந்ததால், அப்பகுதி மக்கள் தாங்களாகவே முன்வந்து பொதுமக்களிடம் நிதி திரட்டித் தங்களது சொந்த உழைப்பால் அந்தப் பூங்காவைச் செப்பனிட்டு அழகாக மாற்றினர். ஆனால், அவர்கள் தூய்மைப் பணியை முடித்துவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்தபோது, அப்பகுதியில் உள்ள பாஜக எம்.எல்.ஏ அஸ்வத் நாராயணன் அந்தத் தூய்மைப் பணிகளைத் தாமே செய்ததாகக் கூறி பிரம்மாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்களின் உழைப்பையும் பணத்தையும் திருடி அரசியல்வாதிகள் கிரெடிட் அடிக்கும் இந்தச் செயலால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள், சமூக வலைதளங்களில் இதற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். “இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அரசியல்வாதிகளின் இந்தச் சுயநல நாடகத்திற்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என நெட்டிசன்கள் பொங்கி எழுந்துள்ளதால் பெங்களூர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
