LATEST NEWS
திருமணத்திற்கு பின் நடிப்பை நிறுத்திய ரோஜா சீரியல் நடிகை… கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா நல்காரி 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்திங் சம்திங் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதன் பிறகு இவருக்கு சினிமாவின் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்ற இவருக்கு சீரியல்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்தன.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து தெலுங்கு சீரியல்களில் அதிக அளவு நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய ரோஜா சீரியலில் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
அந்த சீரியலில் நடிகை சிபுவிற்கு ஜோடியாக இவர் நடித்து வந்தார். ரோஜா சீரியல் மாறி 4 வருடங்களாக ஒளிபரப்பானது. இந்த சீரியல் கலந்த வருடம் தான் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு சீதாராமன் என்ற சீரியலில் பிரியங்கா நடித்தார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி சமீபத்தில் மலேசியாவில் ரகசிய திருமணத்தை முடித்தார். மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் பிரியங்கா ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை கரம் பிடித்தார்.
இந்நிலையின் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய பிரியங்கா நல்காரி தனது கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
