LATEST NEWS
“குடிச்சா தான் எனக்கு தூக்கமே வரும்”… அதனால என் வாழ்க்கையே போச்சு… சோகமான விஷயத்தை பகிர்ந்த மனிஷா கொய்ராலா..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் ஹிந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பல வருடங்களுக்குப் பிறகு தனுஷின் மாப்பிள்ளை படத்தில் கம் பேக் கொடுத்தார். அதன் பிறகு இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு பல வருடங்களாக போராடி வந்தார்.
தனது வாழ்க்கை பற்றி இவர் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் அதிக நேரம் பார்ட்டியில் இருப்பார். ஒரு கட்டத்தில் இவர் போதைக்கு அடிமையாகி அனைத்து நேரங்களிலும் குடித்துள்ளார். தன்னுடைய கெரியரில் கவனம் செலுத்தாமல் போதையால் பல தவறான முடிவுகளையும் எடுத்துள்ளார். குடித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலையில் அவர் இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டேன் எனவும் மனம் திறந்து பேசி உள்ளார்.
அதே சமயம் நேபாள தொழிலதிபர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் விவாகரத்து பெற்ற நிலையில் அதன் பிறகு கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும் அதன் காரணமாகத்தான் மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறியுள்ளார். எந்த ஒரு பிரச்சனைக்கும் மது அருந்துவது தீர்வாகாது. அது நம்முடைய உறவுகள் மீது தீவிர தாசத்தை ஏற்படுத்தி விடும் என்றும் மனம் திறந்து பேசியுள்ளார்.
