LATEST NEWS
19 வயதில் 40 வயது நடிகருடன் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் இணையும் நடிகை அனிகா… ஹீரோ யார் தெரியுமா..??
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் தனது ஐம்பதாவது படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. வடசென்னை பகுதியில் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த கேங்ஸ்டர் உலகில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனது 19 வயதிலேயே 40 வயது நடிகர் தனுஷ் உடன் நடிக்கும் இவருக்கு படரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
