“நாங்க ஆர்மில இருக்கோம், காசு தர முடியாது..!” டோல்கேட்டில் மனைவியுடன் வம்பு செய்த அதிகாரி… இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்க ஆர்மில இருக்கோம், காசு தர முடியாது..!” டோல்கேட்டில் மனைவியுடன் வம்பு செய்த அதிகாரி… இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!!

Published

on

மகிந்திரா எஸ்யூவி காரில் தனது மனைவியுடன் டோல்கேட் பகுதிக்கு வந்த ராணுவ அதிகாரி ஒருவர், தான் அலுவல் பணியில் இல்லாத தனியார் பயணத்தின் போதும் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் அலுவல் ரீதியான பணியில் இருக்கும் போது மட்டுமே சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்ற விதியை அங்கிருந்த டோல்கேட் ஊழியர் மிகவும் அமைதியான முறையில் விளக்கியுள்ளார். ஆனால், தாங்கள் ராணுவத்தில் பணிபுரிவதாலேயே தங்களை எப்போதும் பணியில் இருப்பதாகவே கருத வேண்டும் என்று கூறி அந்த அதிகாரியும், அவரது மனைவியும் ஊழியரிடம் கடுமையாக வாதாடியுள்ளனர்.

அரசு விதிமுறைகளை அந்த ஊழியர் பொறுமையாகப் பலமுறை எடுத்துக்கூறியதுடன், அவர்கள் அலுவல் பணியில் இருப்பது உண்மையானால் தங்களது உயர் அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக் கூறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவர்களிடம் அதிகாரப்பூர்வ ராணுவ வாகனமோ அல்லது அலுவல் பணிக்கான முறையான அடையாளச் சான்றுகளோ இருக்கவில்லை; வெறும் அடையாள அட்டை மட்டுமே இருந்தது. ராணுவ அதிகாரியின் வீண் வாதங்களுக்கும், அவரது மனைவியின் கோபமான நடத்தைக்கும் மத்தியிலும் அந்தத் டோல்கேட் ஊழியர் எவ்வித கோபமும் இன்றி இறுதிவரை கண்ணியத்துடனும் அமைதியுடனும் கடமையாற்றியுள்ளார். இதனால் வேறு வழியின்றி, அந்த ராணுவ அதிகாரி இறுதியில் சுங்கக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in