LATEST NEWS
விலை உயர்ந்த புதிய சொகுசு காரை வாங்கிய ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலின் முதல் சீசனில் திரவியம் மற்றும் பவித்ரா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது அதே பெயரில் ஈரமான ரோஜாவே இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் சித்தார்த், பிரியா, திரவியம் மற்றும் கேப்ரில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது கதையில் தொடர்ந்து காவியா மற்றும் பிரியா கதாபாத்திரம் போர் அடிப்பதாக இருந்தாலும் எப்போதும் சோகமான காட்சிகள் இருப்பதாக கூறி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சீரியலில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்த்தி ராம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தன்னுடைய புதிய கார்ருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
