CRIME
அடக்கடவுளே இதுக்காகவா கொலை..? 8 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்.. மருமகளை அடித்தே கொன்ற மாமனார்.. கொலை நடுங்கும் சம்பவம்..!!
உத்திரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டம், சிர்சியா காவல் எல்லைக்குட்பட்ட பன்கட்வா கலா கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண் ஒருவர், அவரது மாமனாராலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், தனது பிரசவக் கால சிகிச்சைக்காகத் தடுப்பூசி (இன்ஜெக்ஷன்) செலுத்திக்கொள்ளத் தாய் வீட்டிற்குச் செல்ல விரும்பியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மாமனார் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தாய் வீட்டிற்குச் செல்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மாமனார், வீட்டிலிருந்த கொடூரமான ஆயுதத்தால் கர்ப்பிணி மருமகளைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பட்ட மாமனாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
