அடக்கொடுமையே..! ஸ்கூலுக்கு போன புள்ள வீடு திரும்பல… காவல்நிலையத்திலிருந்து வந்த போன் கால்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலால் பறிபோன 2 உயிர்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே..! ஸ்கூலுக்கு போன புள்ள வீடு திரும்பல… காவல்நிலையத்திலிருந்து வந்த போன் கால்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலால் பறிபோன 2 உயிர்கள்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி அனன்யா, தனது காதலர் சந்தீப்புடன் காந்தி பூங்காவில் விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சந்தீப் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு இரு தரப்பு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி, நைனிடாலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது.

இதனையடுத்து, பள்ளிக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அனன்யாவின் பெற்றோர், காதலர் சந்தீப் மற்றும் அவரது சகோதரர் மீது காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர். இந்த வழக்குத் தொடர்பாக அனன்யா தனது குடும்பத்தினரிடம் பேசி, வழக்கை வாபஸ் பெறுமாறு கோரியுள்ளார். ஆனால், குடும்பத்தினர் அதற்குச் சம்மதிக்காததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான காதலர்கள் இருவரும், பூங்காவில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

மயக்க நிலையில் மீட்கப்பட்ட அனன்யா மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வரும் சந்தீப்பிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வளர்ப்பு மகளான அனன்யாவின் திடீர் மரணத்தால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. காதல் திருமணம், கடத்தல் வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய அனைத்துக் கோணங்களையும் இணைத்து காவல் துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in