மகனுக்கு முத்தமிட்டபடி பிறந்தநாள் வாழ்த்து கூறிய அறந்தாங்கி நிஷா… ‘என் முதல் கனவு , என் முதல் நம்பிக்கை நீ ‘… இதோ பதிவு… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகனுக்கு முத்தமிட்டபடி பிறந்தநாள் வாழ்த்து கூறிய அறந்தாங்கி நிஷா… ‘என் முதல் கனவு , என் முதல் நம்பிக்கை நீ ‘… இதோ பதிவு…

Published

on

‘சின்னத்திரை நயன்தாரா’ என தன்னை பாசிட்டிவாகவே கூறிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. இவர் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானார். தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

தற்பொழுது மாரி 2, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நிஷா. இவர் அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். அழகிய ஜோடியான இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisement

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்பொழுது போட்டோஷூட்கள் நடத்தி அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகனுக்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் இணையாயத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில், ‘என் முதல் கனவு, என் முதல் நம்பிக்கை என் காதலுக்கு கிடைத்த முதல் பரிசு, என் மொத்த சந்தோஷம், என் அன்பு மகன் ஹர்ஷத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் கனவை என் கனவாய் சுமப்பதற்கு நான் இருக்கேன் love u ma tangam’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in