மனைவியின் பிறந்த நாளில் மகனின் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்… வைரலாகும் அழகிய புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவியின் பிறந்த நாளில் மகனின் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்… வைரலாகும் அழகிய புகைப்படம்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஜோடி சேர்ந்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. கேரளாவில் பிறந்த ஸ்ரீஜா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் சீரியலில் நடிக்க தொடங்கினார். இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக இவருக்கு நல்ல பெயரை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இதில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீ பூஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.

முதலில் தாங்கள் நண்பர்கள் என்று கூறி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு ஸ்ரீ பூஜா தமிழில் கணவருடன் இணைந்து வெப் சீரிஸ் நடித்தார்.

Advertisement

 

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக செந்தில் அறிவித்திருந்த நிலையில் 9 வருடங்களுக்குப் பிறகு செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று ஸ்ரீஜா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தனது மகனுடன் அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மனைவிக்கு வாழ்த்து கூறியதோடு நண்பர்கள் தின வாழ்த்துகளையும் மிர்ச்சி செந்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Mirchi Senthil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mirchisenthil983)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in