மறைந்த பிரபல காமெடி நடிகர் கொச்சின் ஹனீபாவின் இரட்டை மகள்களை பார்த்துள்ளீர்களா ?… இப்படி வளந்துட்டாங்களே!… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த பிரபல காமெடி நடிகர் கொச்சின் ஹனீபாவின் இரட்டை மகள்களை பார்த்துள்ளீர்களா ?… இப்படி வளந்துட்டாங்களே!…

Published

on

மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் கொச்சின் ஹனீபா  1951ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தவர் ஹனீபா. அவரது இயற்பெயர் சலீம் அகமது கெளஸ். பி.எஸ்.சி தாவரவியல் படித்தவர். கொச்சியில் உள்ள கலாபவன் என்ற பிரபல நாடகக் கலைக் கூடத்தில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு நாடகத்தில் அவருக்கு வைக்கப்பட்ட ஹனீபா என்ற கேரக்டர் பிரபலமானது.

 

Advertisement

 

இதையடுத்து கொச்சின் என்ற பெயரையும், ஹனீபாவையும் சேர்த்து கொச்சின் ஹனீபா என்று அழைக்கப்பட்டார்.1979ம் ஆண்டு அஷ்டவக்ரன் என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் இறங்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

தமிழில் மகாநதி படம் இவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு புகழ் பெற்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பலதரப்பு ரோல்களில் நடித்த திறமைசாலி நடிகர் இவர். இருப்பினும் மிகப் பெரிய காமெடியனாகவே இவர் புகழ் பெற்றார். மலையாளத்தில் 1993ம் ஆண்டு வாத்சல்யம் என்ற படத்தை இயக்கவும் செய்துள்ளார் ஹனீபா.

தமிழிலும், மலையாளத்திலும் பல படங்களை இயக்கியவரும், முக்கிய வேடங்களில் நடித்தவருமான வி.எம்.சி.அனீபா, 2010ல் சென்னை மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.  தற்பொழுது அவர்களின் சமீபத்திய புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in