12 நாட்களில் மட்டும் இத்தனை கோடியா?… புதிய சாதனை படைத்த ‘ஜெயிலர்’… ‘Jailer box office collection’ அப்டேட்…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

12 நாட்களில் மட்டும் இத்தனை கோடியா?… புதிய சாதனை படைத்த ‘ஜெயிலர்’… ‘Jailer box office collection’ அப்டேட்….

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை

Advertisement

அதே போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜெயிலர் திரைப்படம் 10 நாளில் ரூ.500 கோடி வசூலித்து புது சாதனை ஒன்றை படைத்துள்ளதாக சில செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதன் மூலம் கடந்தாண்டு வெளியாகி ரூ.500 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை ஜெயிலர் முறியடித்து உள்ளது. அதே போல் ‘விக்ரம்’ படத்தின் வசூலையும் 10 நாட்களில் முறியடித்து கெத்து காட்டியது.

தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி 2 வாரங்களை எட்ட உள்ள நிலையில், ரசிகர்கள் பலர் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே ஜெயிலர் படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் 12-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .அதன்படி இப்படம் 540 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in