ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் சூட்டிங்… தமிழ்நாட்டில் இங்கெல்லாம் நடக்க போகுதா?.. ரசிகர்களுக்கு குஷியான செய்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் சூட்டிங்… தமிழ்நாட்டில் இங்கெல்லாம் நடக்க போகுதா?.. ரசிகர்களுக்கு குஷியான செய்தி..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் சுமார் 525 கோடி வசூல் சாதனை   படைத்துள்ளது. இதனை தொடர்ந்து  ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் தலைவர் 170 படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ள நிலையில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் செப்டம்பர் 19ஆம் தேதி நேரடியாக படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அங்கு சில காட்சிகளை முடித்த பிறகு நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் thiruvendrum என தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in