ஐஸ்வர்யா அர்ஜூனை மணக்கும் உமாபதி… மகனின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்க காரணம் இதுதான்.. முதல்முறையாக மனம் திறந்த தம்பி ராமையா…!! - Cinefeeds
Connect with us

CINEMA

ஐஸ்வர்யா அர்ஜூனை மணக்கும் உமாபதி… மகனின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்க காரணம் இதுதான்.. முதல்முறையாக மனம் திறந்த தம்பி ராமையா…!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஆக்சன் கிங் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் நிவேதிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவான சொல்லி விடவா என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடித்த நிலையில் தற்போது தனது தந்தை அர்ஜுன இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆதங்கப்பட்டது மகாஜனங்களே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த உமாபதி, மணியார் குடும்பம், திருமணம் மற்றும் தண்ணி வண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தம்பி ராமையா சமுத்திரகனி நடிக்கும் ராஜா கிளி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் இது தொடர்பாக தம்பி ராமையா ஒரு பேட்டியில் பேசும்போது, என்னுடைய மகனின் திருமணத்திற்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெண் பார்க்க தொடங்கினோம். அப்போது ஐஸ்வர்யாவை காதலிப்பதாக அவர் கூறினார். ஒரு பெண்ணின் ஆசைக்கு எந்தவித தடையும் போடக்கூடாது என்ற எண்ணத்தில் உடனே நாங்கள் சம்மதித்து விட்டோம். அர்ஜுன் சார் பேச்சை மீறி நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அவர்கள் வீட்டிலும் முழு சம்மதம் என்று தெரிந்ததும் அர்ஜுன் வீட்டுக்கு முறைப்படி சென்று பேசினோம்.

தற்போது ஐஸ்வர்யா தெலுங்கு படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து நவம்பர் எட்டாம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை அப்போது முடியவில்லை என்றால் தை மாதம் திருமணம் இருக்கும் எனவும் ஐஸ்வர்யாவை பொறுத்தவரை அவர் எங்களுக்கு ஒரு மகள் மாதிரி எனவும் தன்னுடைய மகன் அர்ஜுனுக்கு ஒரு மகன் மாதிரி இருப்பான் எனவும் தம்பி ராமையா கூறியுள்ளார்.