LATEST NEWS
டிரம்பின் அச்சுறுத்தலால் வெடித்த சர்ச்சை… ஜெனிவாவில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்…. பதறிய பாகிஸ்தான் பிரதமர்….!!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிரந்தர அமைதி பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டம் எதிர்பாராத திருப்பங்களுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நடுநிலையாளராகச் செயல்பட்ட இந்த கூட்டத்திற்கு, அமெரிக்கத் தரப்பில் அதன் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் முன்னதாகவே வந்து காத்திருந்தார்.
பொதுவாக வலிமையான நாடுகள் கடைசியாக வரும் என்ற உலக அரசியல் மரபிற்கு மாறாக அமெரிக்கா முன்கூட்டியே வந்திருந்த சூழலில், தாமதமாக வந்த ஈரான் பிரதிநிதிகள் அமெரிக்காவுடன் பேச மறுத்துவிட்டனர். லெபனான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட அச்சுறுத்தல் கருத்துகளுக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த ஈரான் குழுவினர், அமெரிக்கத் துணை அதிபரைச் சந்திக்காமலேயே அரங்கிலிருந்து உடனடியாக வெளியேறினர்.
ஈரான் நாட்டின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஃபீல்டு மார்ஷல் முனீர் ஆகியோர் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திகைத்துப் போயினர். என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பிய அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸிடம், டிரம்பின் பேச்சு காரணமாகவே ஈரான் கூட்டத்தைப் புறக்கணித்தது என்பது விளக்கிக் கூறப்பட்டது.
இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தையின் முதல் அமர்வு தோல்வியில் முடிந்ததாகக் கருதப்பட்டாலும், பின்னர் சுதாரித்துக் கொண்ட ஈரான் குழுவினர் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பினர். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற முதல்கட்ட விவாதங்களின் இறுதியில், இரு நாடுகளுக்கும் இடையே சில மிக முக்கியமான சுமுக முடிவுகள் எட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
