“வெளிநாட்டில் இருந்து கணவருக்கு செக் வைத்த மனைவி…” சிசிடிவியால் சிக்கிய தோழி… “கணவரை கையோடு பிடித்து…” நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வெளிநாட்டில் இருந்து கணவருக்கு செக் வைத்த மனைவி…” சிசிடிவியால் சிக்கிய தோழி… “கணவரை கையோடு பிடித்து…” நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

Published

on

சென்னை மாம்பலம் போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணிபுரியும் ஆரோக்கிய அருள் பிரசாத் என்பவருக்கும், கடலூரைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே அபிநயாவிற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அவர் அங்குச் சென்றுவிட, அருள் பிரசாத் சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில், கணவரின் வீட்டிற்கு அடிக்கடி ஒரு பெண் வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த அபிநயா தன் வீட்டுச் சிசிடிவி கேமராவைத் தனது கைபேசியுடன் இணைத்து வெளிநாட்டில் இருந்தபடியே ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளார்.

Advertisement

அப்போது கணவர் மற்றொரு பெண்ணுடன் பழகுவதை அறிந்து, அவர்களை நேரில் பிடிக்கத் திட்டமிட்ட அபிநயா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் சென்னை வந்து விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். வழக்கம் போல் அருள் பிரசாத் தனது தோழியான ஜனனி என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்ததை அலைபேசி வழியே பார்த்த அபிநயா, உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அபிநயா, கணவரின் தோழியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் காயமடைந்த ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in